சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் தலைவர்கள் முன்னிலையில் கோலகலமாக நடந்து முடிந்தது. |
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற இவ்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், உச்ச நீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் ஏராளமான நீதிபதிகள், சட்டத்தரனிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பிரணாப் முகர்ஜி பேசுகையில், இந்தியாவின் பழமையான பாரம்பரியமான வரலாற்று சிறப்பு மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு மிக்க நீதிபதிகள் பலர் இங்கு பணியாற்றியுள்ளனர். இந்திய நீதித்துறைக்கு பல ஜாம்பவான்களை கொடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் இந்த நீதிமன்றம் நீதித்துறையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இந்நீதிமன்றம் நாட்டில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏழைகளுக்கு குறைந்த செலவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த சட்டத்திட்டம் கொண்டு வரப்படும். அகில இந்திய நீதிப்பணிகள் துறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். விழாவில் 150வது ஆண்டு விழா நினைவு கல்வெட்டை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டத்தரனிகளின் குடும்ப நலநிதி ரூ.2 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கென தமிழக அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது என்றும் கூறினார். மேலும் நீதித்துறைக்கு செய்ய வேண்டியவைகளை தமிழக அரசு ஒருபோதும் தட்டிக் கழிக்காது என்றார். நாட்டிலேயே சென்னை உயர்நீதி மன்றம் வழக்குகளை விரைவாக முடிப்பதில் முன்னிலை வகிக்கிறது என்றும், தமிழக நீதி மன்றங்கள் வழக்குகளை விரைவாக முடிப்பதில் சிறந்த அக்கறை கட்டுவதாகவும் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இக்பால் கூறினார். நீதிமன்றங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதையை இந்த விழா பறைசாற்றுவதாக தமிழக கவர்னர் ரோசய்யா குறிப்பிட்டார். ஏழை மக்கள் எதிர்பார்க்கும் நீதியை பெற்றுத்தருவது நீதித்துறையின் கடமை என்றும், சாதாரண மக்களுக்கும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர் கேட்டுக்கொண்டார். அனைவருக்கும் சம நீதி வழங்கவேண்டும். நாடு முழுவதும் நீதிமன்றங்களை மேம்படுத்த ரூ. 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும், 452 நீதிமன்றங்களை கணினிமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதி அளித்தார். ![]() ![]() ![]() |
Sunday, September 9, 2012
150வது ஆண்டு நிறைவு விழா சென்னை உயர் நீதிமன்றத்தின் கோலாகலம்
Labels:
தமிழக செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment