பாகிஸ்தானின் கராச்சியில் தீ விபத்தில் சுமார் 112 பேர் பலி
கராச்சி, செப்., 12 : பாகிஸ்தானின் கராச்சியில் பால்டியா நகரில் 3 மாடிக் கட்டடத்தில் இயங்கி வந்த துணி ஏற்றுமதி நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 112 பேர் பலியாகிவிட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 35 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தீ கட்டடம் முழுவதும் பரவியதாலும், துணிகள் நிறைந்திருந்ததால் தீ வேகமாகப் பரவியதாலும் அதிகமான உயிர்பலி ஏற்பட்டுள்ளது என்றும், கட்டடம் இடிந்து விழக்கூடிய அபாயமும் உள்ளது என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment