click me

Wednesday, September 5, 2012

வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

செப்.,5:  சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு:
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், முதலிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட வெடி
விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த வெடி விபத்தில் 78 நபர்கள் காயம் அடைந்துள்ளனர். கயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நிதித்துறை அமைச்சர்  பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  நத்தம் விசுவநாதன், நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  வைத்திலிங்கம், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் மற்றும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றுள்ளனர்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.2 லட்சம்,  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000/-
சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000/- முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment