சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை பகலில் மூடுவது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகம் முழுவதும் 6802 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. அதில் 4730 பார்கள் உள்ளன. கிராமங்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளுக்கு இணையாக டாஸ்மாக் கடைகளும் இயங்கி வருகின்றன. அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு இதன்மூலம் வருமானம் கிடைக்கிறது.
மதுவால் இளைஞர் சமுதாயம் பெரியளவில் பாதிக்கப்பட்டிருப்பதால், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் வலுத்து வருகிறது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை மூட அரசு பரிசீலிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ‘பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக்கை அவ்வளவு சுலபத்தில் மூடி விட முடியாது. மாற்று இனங்கள் மூலம் வருவாயை உறுதிப்படுத்தினால் மட்டுமே அந்த நடவடிக்கை சாத்தியம்’ என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
இந்தநிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், ‘மதுக்கடைகளை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரைதான் திறக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாநில அரசின் விளக்கத்தை கேரள ஐகோர்ட் கேட்டுள்ளது. இந்த வழக்கு பற்றிய விவரங்களை தமிழக அதிகாரிகள் சேகரித்துள்ளதாக தெரிகிறது.
சென்னையில் நடந்த டாஸ்மாக் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ‘கேரளாவைப் போல தமிழகத்திலும் பகல் நேரங்களில் கடைகளை மூடி விடலாம். மாலை 5 மணிக்கு மேல் திறந்து இரவு வரை கடைகளை நடத்த அனுமதிக்கலாம்’’ என்ற யோசனை பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளை கேட்டபோது, 'அரசுக்கு தெரிவிக்கும் யோசனைகள் பற்றி வெளியில் சொல்ல முடியாது. எந்தவொரு கொள்கை முடிவாக இருந்தாலும் அரசுதான் முறைப்படி அறிவிக்கும்’’ என்று கூறினர்.

No comments:
Post a Comment