click me

Wednesday, September 5, 2012

இந்தியா– இலங்கை உறவில் விரிசல்? இலங்கை துணை தூதர்

தமிழ்நாட்டில் இலங்கை யாத்ரிகர்கள் மீதான தாக்குதல் சம்பங்களால் இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் பாதிக்கப்படும் என்று இந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் ராஜாகர்ணா தெரிவித்துள்ளார்.
இந்தியா- இலங்கை இடையே சுற்றுலா மற்றும் வர்த்தகம் தொடர்பான உறவுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றது.
நேற்று தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்த இலங்கை யாத்ரிகர்கள் தாக்கப்பட்டதையடுத்து ராஜா கர்ணா, இந்த சம்பவங்களால் இரு நாடுகளுக்கிடையே கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பாதிக்கப்படும் என்று கூறினார்.
உள்ளூர் அரசியல் காரணங்களுக்காக சிறிய அளவிலான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள நீண்ட கால உறவை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை விரிவு படுத்தும் போது அதில் தமிழகமும் பயன்பெற்று வருகிறது என்றார் ராஜா கர்ணா.
தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பேருந்துகள், லொரிகள், ட்ரக்குகள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் இலங்கை இறக்குமதி செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு, திருப்பூர், மதுரை ஆகிய நகரங்களில் இருந்து 1 புள்ளி 90 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு ஜவுளி, சர்க்கரை, காய்கறிகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவை அனைத்தும் இந்தியா– இலங்கை நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக உறவுகளால் தமிழகம் அடைந்து வரும் பலன்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment