click me

Wednesday, September 12, 2012

ரஷ்யாவின் மிக வயதான(வயது 122) நபர் மரணம்

ரஷ்யாவின் டாகெஸ்தான் பகுதியைச் சேர்ந்த முகமது லபசானோவ்(வயது 122) என்பவர் காலமானார்.
படிப்பறிவு இல்லாத லபசானோவ் மரப்பட்டறையிலும், விவசாயத் தொழிலையும் செய்தவர். கடந்த மே மாதம் இவர் தனது 122வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இருப்பினும் இவர் பிறந்த ஆண்டுக்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது ஸ்டாலின் ஆட்சியில் டாகெஸ்தான் பகுதியில் இருந்தவர்கள் மத்திய ஆசிய பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
பின்னர் 50ம் ஆண்டுகளில் இவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர். பொதுவாக காகசஸ் மலை பகுதியையொட்டி வசிப்பவர்கள் நீண்ட நாள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. இந்த வகையில் மீண்டும் டாகெஸ்தான் திரும்பிய, லபசானோவ் 122 வயது வரை வாழ்ந்துள்ளார்.
கடந்த வாரம் 7ஆம் திகதி இரவு இவர் இறந்ததாக இவரது உறவினர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த பெசிகூப்பர் என்பவருக்கு தற்போது, 116 வயதாகிறது. இவர் தான் உலகின் அதிக வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment