இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, தனது 100வது ரொக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பியது. |
கல்வி, காலநிலை, ஒளிபரப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பி வருகின்றது. இது வரை 62 செயற்கைக்கோள்களையும் 37 ரொக்கெட்களையும் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 9.51 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி- 21 என்ற ரொக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது. விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு போட்டியாக விளங்கும் பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-6 மற்றும் ஜப்பானின் ப்ரோயிடர்ஸ் என்ற இரண்டு செயற்கைக் கோள்களை இந்த ரொக்கெட் சுமந்து செல்கிறது. சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் பார்வையிட்டார். ![]() |
Sunday, September 9, 2012
இந்தியாவின் 100வது ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
Labels:
இந்திய செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment