click me

Wednesday, September 5, 2012

சுற்றுலா விசா பெறும் விதிமுறைகளை அவுஸ்திரேலிய அரசு தளர்த்தி உள்ளது.

சுற்றுலா விசா பெறும் விதிமுறைகளை அவுஸ்திரேலிய அரசு தளர்த்தி உள்ளது. இதனால் அங்கு குடியுரிமை பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவுஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கிரிஸ் போவன் கூறுகையில், அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பலர், தங்களின் பெற்றோருக்கு விசா பெற விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர்.
எனவே அவர்களின் பெற்றோர்கள் வருவதற்காக சுற்றுலா விசாவை தாராளமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தகுதியானவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 12 மாதங்கள் தங்கும் வகையில் 5 ஆண்டு சுற்றுலா விசா வழங்கப்படும். பெற்றோர் விசாவுக்காக புதிதாக விண்ணப்பிப்போருக்கு ஒவ்வொரு முறையும் 12 மாதங்கள் தங்கும் வகையில் 3 ஆண்டு சுற்றுலா விசா வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தங்கி அவர்களின் கடமையை செய்ய முடியும்.
இப்புதிய விதிமுறை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலாகும். சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வர அதற்கேற்ற உடல்நிலை மற்றும் தகுதி பெற்றவராக விண்ணப்பதாரர் இருக்க வேண்டும்.
சுற்றுலாவில் வந்து தங்குவதற்கேற்ற வசதி படைத்தவராக இருக்க வேண்டும். இங்கு தங்கியிருக்கும் போது அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment