அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள Boieng's Charleston Factory யிலிருந்து 15 மணிநேர பயணத்திற்கு பின்னர் இவ்விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.
அப்போது தண்ணீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற பூஜை நிகழ்வுகளில் ஏர் இந்திய சிஎம்டி ரோஹித் நந்தன் மற்றும் சிவில், விமான துறையின் மூத்த அதிகாரிகள், ஏர் இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைதியான கேபின்களையும், அழகிய உள்கட்டமைப்பையும் இவ்விமானம் கொண்டிருப்பதாக விமானி கேப்டன் ஏ.எஸ்.சோமன் தெரிவித்துள்ளார்.
சுமார் 256 பயணிகள் பயணம் செல்ல கூடிய வகையில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 ஆயிரம் கிலோ மீற்றர்கள் நிற்காமல் பயணிக்கும் வல்லமையையும் இவ்விமானம் கொண்டுள்ளது.
இன்னும் 2 வாரங்களில் இதே போன்று போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் இரண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருப்பதுடன், அடுத்த வருடம் மார்ச் மாதம் மேலும் 8 விமானங்கள் வழங்கப்படவுள்ளன.
சேவைகள் விபரம்: முதற்கட்டமாக டெல்லி - துபாய், டெல்லி - கொல்கத்தா, டெல்லி - பெங்களூர் மற்றும் டெல்லி - அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கு இந்த போயிங் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
பின்னர் மெல்போர்ன், சிட்னி, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இயக்கப்படவுள்ளன.
ஏற்கனவே ட்ரீம்லைனர் விமானங்கள், ஜப்பான், எத்தியோப்பியா, சிலி, ஆகிய நாடுகளின் தேசிய விமான சேவைகளில் ஈடுபட்டுள்ளன.
|
No comments:
Post a Comment