பரங்கிப்பேட்டை: தினசரி மின்வெட்டுகளுக்கிடையே மாதந்திர பராமாரிப்பு காரணம் காட்டி பகல்நேர முழு மின்வெட்டினையும் பொதுமக்கள் செய்வதறியாது வேதனையுடன் அனுபவித்து வருகிறார்கள். பொதுவாக, இந்த மாதந்திர முழுநேர மின்வெட்டு என்பது முன்பெல்லாம் மாதஇறுதியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமே இருந்தவந்த நிலையில், கடந்த ஒரு சில மாதங்களாக மாத துவக்கத்திலேயே ஏதாவது ஒரு நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரங்கிப்பேட்டையில் இம்மாத முழுநேர மின்வெட்டு நாளை (வியாழன், செப்டம்பர் 6, 2012) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை என்று மின்சாரவாரியம் அறிவித்துள்ளது. இந்த மின் தடை பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பு.முட்லூர், புதுசத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், கீரப்பாளையம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பொருந்தும்.
நன்றி ; my pno
No comments:
Post a Comment