click me

Monday, September 3, 2012

நாடாளுமன்ற முடக்கத்தால் தினசரி மக்களின் வரிப்பணத்தில் ரூ.2 கோடி

நாடாளுமன்ற முடக்கத்தால் தினசரி மக்களின் வரிப்பணத்தில் ரூ.2 கோடி வீணடிக்கப்படுவதாக நாடாளுமன்றச் செயற்பாட்டிற்கான ஆராய்ச்சித்துறை கணக்கிட்டுள்ளது.
கடந்த மாதம் 8ம் திகதி தொடங்கிய நடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 7ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதில் 15 நாட்களுக்கான அலுவல் அமர்வுகள் முடிவடைந்து விட்டன. இவற்றில் மூன்று நாட்கள் மட்டுமே முழுமையான பணிகள் நடைபெற்றுள்ளன.
அந்த வகையில் மக்களவையின் 50 சதவீத அலுவலும், மாநிலங்களவையின் 62 சதவீத அலுவலும் நடப்புக் கூட்டத்தொடரில் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1950ம் ஆண்டுகளில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 125 நாட்கள் அலுவல் நடைபெற்றதாகவும், 1970களில் அது 100 நாட்களாகக் குறைந்து, தற்போது 73 நாட்களாக மேலும் தேய்ந்து விட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2011 ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த மே மாதம் வரை ஒராண்டு காலத்தில் மட்டும் 12 ஆயிரம் ஒத்தி வைப்புகளையும், 110 அமளிகளையும் இரு அவைகளும் சந்தித்திருப்பதாக நாடாளுமன்றச் செயல்பாட்டுக்கான ஆராய்ச்சித்துறை கணக்கிட்டுள்ளது.

No comments:

Post a Comment