அப்துல் கலாம் எச்சரிக்கை:அடுத்த போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும்
கோட்டயம், செப்., 07 : இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். நதிகள் மட்டும் அல்லாமல், நீர் நிலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாம் கூறியுள்ளார்.
கேரளாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அப்துல் கலாம், நாட்டின் முன்னேற்ற நடவடிக்கைகளில் முக்கியமான இடத்தில் நதிகள் இணைப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள கங்கை, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா, காவேரி உள்ளிட்ட பெரிய நதிகளை ஒன்றிணைக்க வேண்டும். இவ்வாறு இணைத்தால் இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படாது. எதிர்காலத்தில் தண்ணீருக்காகத்தான் போர் நடைபெறும் என்று கூறினார்.
கல்லூரி மாணவர்களிடையே பேசிய கலாம், இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும். உங்களது பெற்றோர் ஊழலில் ஈடுபடுவது தெரிந்தால் நீங்கள் அவர்களை கேள்வி கேட்க வேண்டும்... தங்களது பிள்ளைகளே தங்களைக் கேள்வி கேட்பது என்பது மிக மிக மோசமான விஷயம் இல்லையா? அதைவிட மோசமானது அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment