
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான் அணு சக்தியை மின்சார உற்பத்தி போன்ற ஆக்கப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்க அமெரிக்கா, ரஷ்யா உட்பட 6 நாட்டு தூதர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்ய வெளியுறவு துணை மந்திரி செர்கி ரியாப்கோவ் இடம் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் ஈரான் கடந்த சில மாதங்களாக அணு சக்தி பொருட்களை தீவிரமாக பயன்படுத்தி வருவதாக புதிய புகார் கூறப்பட்டது. எனவே இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை எடுத்து ஈரான் அணு உலைகளை அழிப்போம் என்று அடிக்கடி மிரட்டல் விடுத்து வருகிறது.
இது தொடர்பாக ரஷ்ய வெளிவிவகார துணை அமைச்சர் செர்கி ரியாப்கோவ் கூறுகையில், ஈரான் அணு குண்டு தயாரிப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவில்லை. அங்கு இராணுவ பயன்பாட்டிற்காக அணுசக்தி பொருட்கள் திருப்பி விடப்படவில்லை என்பதை சர்வதேச குழு அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஆதலால் இந்த அணு உலை பிரச்சினைக்காக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் வேறு நாடுகள் தாக்குதல் எதையும் நடத்தக் கூடாது.
இராணுவ நடவடிக்கை விவேகமாக இருக்காது என எச்சரிக்கிறோம். அதை மீறி தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கு பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும். அந்த பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன் பாதுகாப்பு, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment