click me

Tuesday, September 4, 2012

புனித குரானின் பக்கங்களை எரித்த குற்றச்சாட்டின் கீழ்

புனித குரானின் பக்கங்களை எரித்த குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்துவ சிறுமி தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் இமாம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வசிக்கும் ரிம்ஷா மசி(வயது 11) என்ற சிறுமி முஸ்லிம்களின் புனித குரானின் பக்கங்களை எரித்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டாள். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மெஹ்ரியா ஜாஃபரில் உள்ள ஜாமாயா அமினியா மசூதியின் இமாம் காலித் சிஸ்டியை பொலிசார் கைது செய்தனர்.
ஹபீஸ் முகமது ஜுபைர் என்பவர் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த சாட்சியத்தின் பேரில் இமாமை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இமாம் சிஸ்டி, ரிம்ஷாவின் பையில் குரான் நூலின் சில பக்கங்களை வேண்டுமென்றே போட்டதாக ஹபீஸ் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
இதை அப்போதே பார்த்த ஹபீஸ், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கிறிஸ்தவ மதத்தினரை இந்தப் பகுதியிலிருந்து விரட்டுவதற்காக இப்படிச் செய்வதாக இமாம் கூறியதாக ஹபீஸ் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இமாமுக்கு குரான் அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடும் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment