click me

Tuesday, September 4, 2012

பாகிஸ்தானின் பிரபல பாடகி ஆனி காலித் திருமணத்தில் மோதல் எழுந்தது.

பாகிஸ்தானின் பிரபல பாடகி ஆனி காலித் திருமணத்தில் பொலிசாருக்கும், மணமகன் வீட்டாருக்கும் இடையே மோதல் எழுந்தது.
பாகிஸ்தானிய பாடகி ஆனிக்கும், மாலிக் நவ்ரஸ் அவானுக்கும் நேற்று முன்தினம் லாகூரில் திருமணம் நடந்தது.
பஞ்சாப் மாகாண அரசு விதிமுறைப்படி இரவு 10 மணிக்குள் திருமண விழாவை முடிக்க வேண்டும். ஆனால் ஆனி திருமணத்தில் 10.30 மணியாகியும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.
இதைக் கேள்விப்பட்ட பொலிசார் திருமண மண்டபத்துக்கு வந்து, நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் படி அறிவுறுத்தினர். ஆனால் மணமகன் வீட்டார் சிலர் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆனியின் மாமனாரை பொலிசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஆனி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து மணமகன் மாலிக், திருமண நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க பொலிசார் 15 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டனர். இதை நாங்கள் தர மறுத்ததால் அவர்கள், வாக்குவாதம் செய்தனர்.
திருமணமான முதல் நாளே ஆனி மருத்துவமனையில் இருப்பது வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment