பாகிஸ்தானில் 3 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த 38 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விசா விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக இருந்தன.
இந்த விதிமுறைகளில் தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, இப்போது புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சலுகைகள்: புதிய விசா ஒப்பந்தத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே குழுவாக வருவோருக்கு ஆன்மிக பயண விசா, வர்த்தகர்களுக்கான தனி விசா போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
65 வயதை கடந்த மூத்த குடிமக்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானை சென்றடைந்த பின்னர் வாகா அல்லது அட்டாரி எல்லைப் பகுதியில் விசா பெற்றுக் கொள்ளலாம்.
விசா வழங்குவதற்கான கால வரம்பு எதுவும் முடிவு செய்யப்படா விட்டாலும் விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் விசா கிடைக்க வகை செய்யப்படும்.
நிபந்தனை தளர்வு: புதிய ஒப்பந்தப்படி இரு நாட்டவர்களுக்கும் 5 இடங்களுக்கு செல்லும் வகையில் விசா தரப்படும். இதற்கு முன்பு 3 இடங்களுக்கு மட்டுமே செல்லமுடியும்.
பிரபல தொழிலதிபர்கள், 65 வயதை கடந்தோர், 12 வயதுக்கு உட்பட்டோர், பொலிஸிடம் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
சொந்தக்காரர்களை சந்திக்க செல்வோருக்கான விசா ஒரு முறை பதிவு என்ற வகையில் 6 மாதத்துக்கு வழங்கப்படும்.
5 இடங்களுக்கு செல்ல பயன்படுத்தலாம். ஒரு இடத்தில் 3 மாதத்துக்கு மேல், இருக்கக் கூடாது.
இதன்பின் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியதாவது: அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள, பயங்கரவாதத்தை இரு நாடுகளும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது என உறுதி மேற்கொண்டுள்ளன.
மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவோம் என பாகிஸ்தான் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சரியான சூழல் உருவானால் பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தான் வருவார் என கூறினார். |
No comments:
Post a Comment