click me

Wednesday, September 5, 2012

இந்திய உணவு விடுதி ஒன்றில் சுத்தமான உணவு வழங்கப்படவில்லை என புகார் வந்தது.ரூ.55 லட்சம் அபராதம்

அவுஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் உள்ள இந்திய உணவு விடுதி ஒன்றில் சு  த்தமான உணவு வழங்கப்படவில்லை என புகார் வந்தது.
அங்குள்ள உணவுகளில் கரப்பான் பூச்சிகள் மொய்க்கின்றன என வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர்.
இதை தொடர்ந்து அங்கு சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது உணவு விடுதியின் சமையல் அறையிலும், அதை சுற்றியுள்ள இடங்களிலும் எலி செத்து கிடந்தது.
மேலும் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை அங்குமிங்கும் சுற்றி திரிந்ததையடுத்து உணவு விடுதி மீது சுகாதார அதிகாரிகள் 13 புகார்கள் பதிவு செய்தனர்.
இது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை பெண் நீதிபதி கெய்ல் மாட்க்விக் விசாரித்தார்.
ஒவ்வொரு புகாருக்கும் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் வீதம் 13 புகாருக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment