click me

Saturday, September 8, 2012

இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகள் இடையே இன்று முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.
அங்கு அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது இரு நாடுகள் இடையிலான அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து அவர்கள் ஆலோசித்தனர். தீவிரவாதம் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப்பை எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து இரு தரப்பு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளி விவகாரத்துறை அமைச்சர் ஹினா ரப்பானியை, கிருஷ்ணா இன்று சந்திக்கிறார்.
அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே விசா வழங்குவதற்கான நடைமுறைகளை தளர்த்த வழி வகை செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.
மேலும் பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வது குறித்து ரப்பானியிடம் கிருஷ்ணா பேசுவார் என தெரிகிறது.
  

No comments:

Post a Comment