
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி இதுகுறித்து கூறியதாவது:-
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மக்களின் முடிவை தெரிந்து கொள்வதற்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியில் பிரதம மந்திரி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்னும் வியாதியால் வருந்தி கொண்டிருக்கிறது.
பாரதீய ஜனதாவோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியோ முட்டை பொரிப்பதற்குமுன் கோழிக் குஞ்சுகளை எண்ணக்கூடாது. கடந்த 2007-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு பிரதம மந்திரி வேட்பாளராக இருந்த நிலை மாறி இப்போது 2012-ல் மிக வேகமாக எண்ணற்ற வேட்ப்பாளர்களை சுட்டிக்காட்டுவது அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடைய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் டுவிட்டரில் பிரதம மந்திரி வேட்பாளர் குறித்து கூறியிருப்பதாவது:-
மகாராஷ்ட்ராவில் வேலை பார்க்கும் உ.பி. மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் மீது சிவசேனா மற்றும் நவ நிர்மான் கட்சியினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவசேனா கட்சியினரால் பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்க பரிந்துரைத்துள்ள சுஷ்மா சுவராஜ் முதலில் இந்த தாக்குதல் குறித்த அக்கட்சியின் நிலை என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். பிறகு அவர் பிரதம மந்திரி வேட்பாளராக இருக்கலாம்.
No comments:
Post a Comment