கடந்த மாதத்தில் மட்டும் 1,00,000 பேர் அகதிகளாக வெளியேற்றம் சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரம்
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரின் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,00,000க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் பேசுகையில், சிரியாவில் மனித நேய உணர்வுகள் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன.
இராணுவமும், போராட்டக்காரர்களும் பொதுமக்களை பாதுகாக்க தவறிவிட்டன. சர்வதேச மனிதநேய சட்டம் என்பது அறவே இல்லாமல் போய்விட்டது.
எனவே அண்டை நாடுகள் தங்களிடம் அடைக்கலம் தேடிவரும் மக்களிடம் அன்பு காட்டுங்கள்.
சண்டையை நிறுத்துவதற்கு உதவி செய்யுங்கள். ஆயுதம் விற்பவர்களால் மேலும் மேலும் துயரங்கள் தான் அதிகரிக்கும். இதனால் ஏற்படும் விளைவுகளை சிறிதளவும் எண்ணிப் பார்க்க இயலவில்லை என்றார்.
இதுவரையிலும் 235,300க்கும் அதிகமானோர் அகதிகளாக தம்மைப் பதிவு செய்யக் காத்திருப்பதாகவும் ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment