சர்வதேச விண்வெளி நிறுவனத்தில் பணியாற்றும் நாசா குழுவினர் நாளை ஆகாயத்தில் நடந்தவாறு துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை சரி செய்கின்றனர்.
பூமியில் நடக்கிற நிகழ்வுகளையும் பூமிக்கு வெளியே அண்டத்தில் நடக்கிற நிகழ்வுகளையும் ஆராய சர்வதேச விண்வெளி நிறுவனம் 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
விஞ்ஞானிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வரும் இந்நிறுவனத்திற்கு 6 பேர் கொண்ட விண்வெளிக்குழு அங்க தங்கி பணியாற்றி வருகின்றது.
கடந்த மாதம் யூலை 1 முதல் செப்ரெம்பர் 17 வரை விண்வெளி நிலையத்தில் தங்கி பணியாற்ற திட்டமிட்டுள்ள இக்குழுவிற்கு நாசாவின் சுனிதா வில்லியம்ஸ் தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
இக்குழுவினர் நாளை விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து 6 1/2 மணிநேரம் ஆகாயத்தில் நடந்தவாறு இந்நிறுவனத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரிசெய்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி நாசா விண்வெளி நிறுவன தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.


No comments:
Post a Comment