click me

Friday, September 7, 2012

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பறவைகளுடன் பறந்தார் (வீடியோ இணைப்பு)

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சாகசங்கள் பற்றி உலகம் முழுவதும் அறிந்தவர்கள் இருக்கின்றனர்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற கண்ணோட்டத்தை விட்டும் அப்பாற்பட்டவர் புடின்.
குதிரையேற்றம், கார் ரேஸ், பனிப்பிரதேசத்தில் தங்குவது, அதிவேக ஜெட்டில் பறப்பது என அனைத்து விடயங்களும் புடினின் விரல் நுனியில் புதைந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் வடகோடி பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது புதின், கிளைடரில் வானில் பறக்க அப்போது சைபீரிய கொக்குகளும் அந்த கிளைடருக்கு சமமாக பறந்து கொண்டிருந்தன.
பின்னர் கிளைடரில் உட்கார்ந்தபடியே சைபீரிய கொக்கு தமது வாகனத்தை விட்டு நகரும் வரை உற்றுப் பார்த்தபடியே காத்திருந்து பின்னர் காற்றில் பறந்திருக்கிறார்.
இப்படி புதின் வெள்ளை உடையில் வானில் பறப்பதற்கு முதல்நாள் ஒரு வேடிக்கையும் அரங்கேறியுள்ளது.
ரஷ்யாவின் "ஆல்பா- நாய்" என்று புதினை அமெரிக்க ராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அம்பலமாகியிருந்தது.
இதே போல் புடின் ஒரு கறுப்பு உடையில் சாம்பல் நிற இறக்கைகளுடன் நிற்பதைப் போல கார்ட்டூனும் வரையப்பட்டிருந்தது.
சைபீரிய கொக்குகளுடன் பறந்துவிட்டு தரையிறங்கி அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த புடின், இப்ப நான் ஆல்பா- கொக்கு என்று சொல்லி சிரித்திருக்கிறார்.

No comments:

Post a Comment