click me

Wednesday, September 5, 2012

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவதையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். 
தமிழகத்தில் பிறந்து ஆசிரியராக பணிபுரிந்த டொக்டர் ராதாகிருஷ்ணன் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
அவரது சேவைகளை நினைத்து போற்றும் விதமாக ஒவ்வொரு செப்ரெம்பர் 5ம் திகதி அவரது பிறந்தநாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
எனவே ஆசிரியப் பணிக்கு பெருமை தேடித் தந்தவர் ராதாகிருஷ்ணன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, அவர் காட்டிய வழியில் ஆசிரியர்கள் நல்ல குறிக்கோள்களையும் சமுதாய சிந்தனைகளையும் மாணவர்களுக்கு விதைத்து கல்விப் பணியாற்ற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்வுக்காக உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment