கடலூர், செப்.5-

இந்நிலையில் கடலூர் பஸ்நிலையம் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் டாக்டர் எம்.பி.ராஜா தலைமையில் அலுவலர்க்ள திடீர் சோதனையிட்டனர். அசைவ ஓட்டல்களில் சென்று சோதனையிட்டபோது உடலை பாதிக்கக்கூடிய அளவில் சிக்கன், மீன் வகைகளில் அதிகளவில் கலர்பொடி சேர்த்து இருந்தது தெரியவந்தது.
இவற்றை பொதுமக்கள் கண்எதிரே ரோட்டில் கீழே கொட்டினார்கள். பின்னர் டீ கடைக்கு சென்று தூள்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பேக்கரி கடையில் சென்று மிக்சர், முறுக்கு மற்றும் பல்வேறு பொருட்களை ஆய்வு செய்ததில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு சில பொருட்கள் இருந்ததையொட்டி அதுவும் கீழே கொட்டினார்கள்.
பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து உணவகங் களையும் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் எம்.பி. ராஜா ஆய்வு செய்தார். அப்போது டீகடையில் உள்ள பஜ்ஜி, மிக்சர், முறுக்கு ஆகியவற்றில் கலர் பவுடர் அதிகள வில் கலந்து விற்பனை செய்ததால் இந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டினார்கள். இதனை பொது மக்கள் ஒன்றுகூடி நின்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் எம்.பி.ராஜா கூறியதவாது:-
கடலூர் மாவட்டம் முழுவதும் உணவு கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறோம் அப்போது பல்வேறு கடைகளில் உணவு பொருட்களில் கலர் பவுடர் கலந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தனர். இந்த உணவு பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ஆகையால் கலர் பவுடர் கலந்த உணவு பொருட்களை கீழே கொட்டிவிட்டு அனைத்து கடை உரிமையாளர்களுக்கு 15 நாள் கால அவகாசம் கொடுப்போம். பின்னர் அதே கடையில் ஆய்வு செய்யும்போது மீண்டும் அப்படியே உணவு பொருட்கள் விற்றால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களுக்கும், உணவு கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment