click me

Saturday, September 8, 2012

சிவகாசி, பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார்.


கொச்சி: 
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, முதலிப்பட்டியில், தனியாருக்கு சொந்தமான, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 38 பேர் பலியாகினர்; 44 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர் மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில், காயமடைந்தவர்களுக்கு, "அக்னி ஜித்து' என்ற, மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும். சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், நேற்று முன்தினம் இரவு, சிவகாசி சென்றடைந்தன. இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில், ""நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன்,'' என்றார்.

No comments:

Post a Comment