click me

Thursday, September 6, 2012

அமெரிக்காவில் வீசிய ஐசக் சூறாவளியில் சிக்கி உயிரிழந்த ஆயிரக்கணக்கான எலிகள்

அமெரிக்காவில் வீசிய ஐசக் சூறாவளியில் சிக்கி உயிரிழந்த ஆயிரக்கணக்கான எலிகள் மிசிசிபி கடற்பகுதியில் கரை ஒதுங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசியில், அமெரிக்காவின் வடக்கு பகுதியை தாக்கிய ஐசக் சூறாவளியால் பல பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாயின.
லூசியானாவில் ஏராளமான சதுப்பு நிலப்பகுதிகள் உள்ளது. ஆயிரக்கணக்கான எலிகளின் வசிப்பிடமாக அப்பகுதிகள் திகழ்கிறது.
சூறாவளியின் வேகத்தில் இப்பகுதியில் வெள்ளம் பாய்ந்து ஏராளமான எலிகள் செத்தன. மேலும் பல ஆயிரக்கணக்கான எலிகள், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் தள்ளப்பட்டன.
சூறாவளியில் சிக்கி இறந்த இவற்றின் சடலங்கள் நேற்று முன்தினம், மிசிசிபி கடற்கரையில் ஒதுங்க தொடங்கி உள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவைகளை அகற்றும் பணியில் ஒப்பந்ததாரர்கள் பலர் ஈடுபட்டு, 16 ஆயிரம் எலிகளின் சடலங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றை தவிர பாம்பு, முயல், மான் போன்றவற்றின் சடலங்கள் கரையில் ஒதுங்கி வருவதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment