click me

Showing posts with label கடலூர் மாவட்ட செய்திகள். Show all posts
Showing posts with label கடலூர் மாவட்ட செய்திகள். Show all posts

Saturday, March 30, 2013

ரெயிலில் அனுப்பிய எஸ்.எஸ்.எல்.சி. விடைதாள்கள் சேதம்: மறு தேர்வு நடத்தப்படுமா?


தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசு பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய இந்த பரீட்சையின் 545 விடைத்தாள்கள் 3 பண்டல்களாக கட்டப்பட்டது.

பின்னர் இந்த தேர்வு தாள்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சியில் அந்த பண்டலை இறக்கிய போது அதில் 3 கட்டுகள் குறைந்திருந்தன. அவைகளை தேடியபோது விருத்தாசலம் ரெயில் தண்ட வாளத்தில் சிதறி சேதமடைந்து கிடந்தன. இது பற்றி கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

Thursday, March 21, 2013

சிதம்பரத்தில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை

சிதம்பரம், மார்ச்.20-

சிதம்பரம் மேம்பாலத்தில் கீழே நேற்று இரவு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பச்சை கலரில் டீ சர்ட்டும், வெள்ளை கலரில் கட்டம்போட்ட சட்டை மற்றும் கட்டம்போட்ட கைலி அணிந்திருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து புரூனியோ மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது.

கடலூரில் பிளாஸ்டிக்கை ஒழிக்க தீவிர நடவடிக்கை

கடலூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாறுபட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், ஊராட்சி குழு தலைவருமான மல்லிகா வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.

மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், திட்டக்குழு அலுவலர் ஆனந்தன், ஒன்றிய குழு தலைவர்கள் மணிமேகலை பழனிசாமி, ஜெயபால், மணிகண்டன், சுந்தர்ராஜன், செல்வராஜ், சுந்தரிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முருகுமாறன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

Saturday, December 29, 2012

சிதம்பரத்தில் தமிழ் இணைய மாநாடு: ஆய்வறிஞர்கள் பங்கேற்பு


தமிழ்மொழியை வளர்க்க அதை மற்றவர்களும் அறிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
1வது உலகத்தமிழ் இணைய மாநாடு தொடக்கவிழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக குமாரராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது. மொழியியல் உயர் ஆய்வு மையம், உலகத்தமிழ் தொழில் மன்றம் மற்றும் கணினி தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்தியா மட்டுமல்லாமல், இங்கிலந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மொழியியல் வல்லுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழ் மென்பொருள் கண்காட்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது. தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்கியுள்ள 3 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மாநாட்டில் கருத்தரங்கு மட்டுமல்லாமல் அதை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக கண்காட்சி, மக்கள் அரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.

கடலூரில் கடல் அரிப்பு: மீனவர் வீடு இடிந்தது

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூரில் இன்று காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்தும், குளிர்ந்த காற்றும் வீசியது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் கடலூர், தாழங்கூடா, தேவனாம்பட்டினம், கடலூர் துறைமுகம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்தற்கும் மேற்பட்ட படகுகளை மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். கடலூரில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால் தேவனாம்பட்டினம் பகுதியில் 4 அடி உயரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Friday, November 23, 2012

பரங்கி பேட்டை : முட்லூர் "ரப்பானியா" சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்!


நவ 23: பரங்கிப்பேட்டை அருகேயுள்ள பி.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே "ரப்பானியா சூப்பர் மார்க்கெட்" உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு அதன் உரிமையாளர் சபிருல்லாஹ் மற்றும் ஊழியர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூபாய்.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள், அழுகு சாதனைப் பொருட்கள், அரிசி மூட்டைகள், காலணிகள் மற்றும்  அலமாரிகள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது. 

மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்துயிருக்கலாம் என்ற கோணத்தில் பரங்கிப்பேட்டை பேலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
thanks:tntjpno

கடலூர் சிப்காட் ஆபத்தான ரசாயன ஆலைகளை மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூரில் உள்ள ஆபத்தான ரசாயன ஆலைகளை மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் 
கடலூர் சிப்காட் பகுதியிலுள்ள ஆர்க்கீமா பெராக்சைட்ஸ் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த ஆலையிலிருந்து ரசாயனம் பரவியதால் அப்பகுதியில் உள்ள 10-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கடலூர் சிப்காட் பகுதியில் கெம்பிளாஸ்ட், ஆர்க்கீமா போன்ற ரசாயன தொழிற் சாலைகளை தொடங்க திட்டமிடப்பட்டபோதே, நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சு ஆலைகளுக்கு அனுமதி அளித்தால், அப்பகுதிகளில் வாழும் மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரித்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினேன்.

Wednesday, November 21, 2012

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பலருக்கு மூச்சுத்திணறல்

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: பலருக்கு மூச்சுத்திணறல்கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று மாலையில் கொதிகலன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் பதற்றத்துடன் வெளியேறினர். தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த தொழிற்சாலையில் இருந்த மற்றொரு கொதிகலனும் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த ரசாயன புகை காரணமாக  பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதில் ஏற்பட்ட சேதவிவரம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கேரி பேக்குகளை அப்புறப்படுத்தினர்.


டெங்கி நோய் ஒழிப்பு பணியில் தீவிர முனைப்புடன் பணியாற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ அவ்வப்போது சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். அவ்வாறே கடலூர் மாவட்டத்தை "மக்கும்  தன்மையற்ற நெகிழி பயன்படுத்தாத மாவட்டமாக மாற்றுவதிலும் முனைப்புடன் பணியாற்றி வருகின்றார். 
அந்த வகையில், சிதம்பரம் நகரில் வர்த்தக நிறுவனங்களில்  கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னு செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Tuesday, November 6, 2012

பண்ருட்டி அருகே குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.2 கோடி முந்திரிபருப்பு நாசம்

பண்ருட்டி அருகே குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.2 கோடி முந்திரிபருப்பு நாசம்பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலிரில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனில் ஒரு பகுதியில் ஒரு முந்திரி நிறுவனத்தின் சார்பில் 3 ஆயிரத்து 200 முந்திரி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு பகுதியில் உள்ள அறையில் 2 கன்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட மரச்சாமான்களை இறக்கு வதற்காக இன்று அதிகாலை 3 மணிக்கு  தொழிலாளர்கள் வந்தனர்.

அப்போது மின்சாரம் இல்லாததால் மெழுகு வர்த்தியை இந்த அறையில் ஏற்றி வைத்து மரச்சாமான்களை இறக்கினார்கள். பின்னர் அந்த மெழுகு வர்த்தியை அணைக்காமல் கதவை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த மெழுகுவர்த்தி கீழே சாய்ந்ததால் மரச்சாமான்கள் மீது தீ பற்றியது. 

Saturday, November 3, 2012

கடலூர் மாவட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு லேப்டாப்

 கடலூர் மாவட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு லேப்டாப்கடலூர் மாவட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி தமிழக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இலவச லேப்டாப்க்களை, அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்ட எம்.எல்.ஏக்களான ரா.ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுபரமணியன், செல்வி ராமஜெயம், பாலகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் எம்.பி.சம்பத் ஆகியோருக்கு இன்று லேப்டாப் வழங்கப்பட்டது. இதை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் மூன்று பேரி இந்த நிகழ்ச்சியை புறக்கணித்திவிட்டார்கள். 

Sunday, October 21, 2012

தொடர் மழை: சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை: சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலிதொடர் மழையால் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையே தொடர் மழைக்கு கடலூரில் சிறுவன் ஒருவன் பலியான். அதன் விவரம் வருமாறு:- 

கடலூர் புதுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன். டெய்லர் வேலை செய்து வருகிறார். தொடர் மழை காரணமாக கோதண்டராமனின் வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்தது. இதையடுத்து கோதண்டராமனின் மனைவி மழை நீரை வெளியேற்ற வடிகால் வெட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் பார்த்தசாரதி (வயது 7) இடிபாடுகளில் சிக்கி கொண்டான்.

Wednesday, October 17, 2012

கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்:பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்: கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்கடலூர், அக். 17-

கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து பூஜ்ஜியக்கழிவு மேலாண்மை கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் பண்ருட்டி நகரில் நடைபெற்றது. 

சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் ஏட்டை கொலை செய்ய முயன்ற 3 பேர் கோர்ட்டில் சரண்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ராஜா. இவர் சிதம்பரம் வண்டிகேட் உமாபதி நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஆட்டோவில் சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை ஏட்டு ராஜா விசாரித்தார். அதற்கு அவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். உடனே தனது செல்போனில் அவர்கள் 3 பேரையும் படம் பிடித்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த அவரை சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்குபதிவு செய்து ஏட்டு ராஜாவை தாக்கியவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த, சிதம்பரத்தை சேர்ந்த ராம் (30), சுரேஷ் (25), சீர்காழியை சேர்ந்த கார்த்திகேயன் (30) ஆகியோர் நேற்று விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் சரண் அடைந்தனர்.

இவர்கள் 3 பேரையும் காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tuesday, September 11, 2012

கடலூரில் தொழில் முதலீட்டு மண்டலம்

கடலூரில் தொழில் முதலீட்டு மண்டலம் அமைப்பதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: மு.க.அழகிரி தகவல்தமிழ்நாட்டில் கடலூரில் பிசிபிஐஆர் (ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனம் தொழில் முதலீட்டு மண்டலங்கள்) உருவாக்கப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடைபெறும். 2013-ல் பணி தொடங்கும். இதன் மூலம் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு மத்திய மந்திரி மு.க. அழகிரி கூறினார்.

Sunday, September 9, 2012

கடலூர் அருகே இளம்பெண் ஒருவர் இன்று அதிகாலைஅடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கடலூர், செப்.9: கடலூர் அருகே இளம்பெண் ஒருவர் இன்று அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது தாலிசரடு மற்றும் மோதிரம் திருடுபோனது.
கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (32). விவசாயியான இவரது மனைவி மாலா (28). இவர்களுக்கு பிரசாத் (9), சுவேதா (8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுரேஷ் அருகே உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். பிரசாத் அருகே உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். சுவேதா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாலா ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரது அருகில் ரத்தம் தோய்ந்த இரும்பு ராடு கிடந்துள்ளது. மாலா மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

Wednesday, September 5, 2012

கடலூர் மாவட்டம் முழுவதும் ஓட்டல்களில் சுகாதார அதிகாரி சோதனை: தரமில்லாத உணவுகள் கொட்டி அழிப்பு


கடலூர், செப்.5-
கடலூர் பஸ் நிலைய ஓட்டல்களில் சுகாதார அதிகாரி சோதனை: தரமில்லாத உணவுகள் கொட்டி அழிப்புகடலூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் எம்.பி.ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், ஏழுமலை மற்றும் ஊழியர்கள் டீக்கடை, ஸ்வீட் ஸ்டால், பேக்கரி, ஓட்டல், சாலையோர உணவகங்கள் ஆகியவற்றுக்கு நேரில் சென்று அதிரடி சோதனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடலூர் பஸ்நிலையம் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் டாக்டர் எம்.பி.ராஜா தலைமையில் அலுவலர்க்ள திடீர் சோதனையிட்டனர். அசைவ ஓட்டல்களில் சென்று சோதனையிட்டபோது உடலை பாதிக்கக்கூடிய அளவில் சிக்கன், மீன் வகைகளில் அதிகளவில் கலர்பொடி சேர்த்து இருந்தது தெரியவந்தது.
இவற்றை பொதுமக்கள் கண்எதிரே ரோட்டில் கீழே கொட்டினார்கள். பின்னர் டீ கடைக்கு சென்று தூள்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பேக்கரி கடையில் சென்று மிக்சர், முறுக்கு மற்றும் பல்வேறு பொருட்களை ஆய்வு செய்ததில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு சில பொருட்கள் இருந்ததையொட்டி அதுவும் கீழே கொட்டினார்கள்.

Tuesday, September 4, 2012

கடலூர் நீதிபதிக்கும், காவல்துறை ஆய்வாளருக்கும் மோதல் : ஆய்வாளர் சிறைபிடிப்பு

கடலூர், செப்., 04 : கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், கடலூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி புகழேந்திக்கும், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வளர் கார்த்திகேயனுக்கும் இடையே இன்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை ஆய்வாளரை நீதிமன்றத்தில் சிறைவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக வந்த ஆய்வாளர் கார்த்திகேயனுக்கும், நீதிபதி புகழேந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தள்ளியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கார்த்திகேயனை சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர், குற்றவியல் நடுவர் நீதிபதியிடமும், முதன்மை நீதிபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து ஆய்வாளர் கார்த்திகேயனை நீதிமன்ற ஊழியர்கள் விடுவித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மிளகாய் பொடி தூவி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் நகை கொள்ளை கடலூரில்

கடலூரில் மிளகாய் பொடி தூவி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் நகை கொள்ளைகோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). நகை வியாபாரி. இவர் நகைகள் செய்து கடலூரில் உள்ள நகை கடைக்கு விற்பனை செய்து வந்தார். நேற்று இரவு 200 பவுன் நகைகள் செய்து ஒரு பையில் வைத்துக்கொண்டு கோவையில் இருந்து கடலூருக்கு தனியார் பஸ்சில் ஏறி வந்தார். அவருடன் நகை வியாபாரிகள் பாலகணேஷ், சிவக்குமார் ஆகியோரும் வந்தார்கள். 

இன்று காலை 6.15 மணிக்கு அவர்கள் கடலூர் வந்து சேர்ந்தார்கள். பாலகணேசும், சிவக்குமாரும் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் தங்குவதற்காக சென்றார்கள். வெங்கடேஷ் மட்டும் சின்னவாணியார் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் தங்குவதற்காக நடந்து சென்றார். கையில் நகை பையை வைத்திருந்தார். இதைநோட்டமிட்ட 2 மர்ம வாலிபர்கள் வேகமாக அங்கு வந்தனர். வெங்கடேஷ்மீது மிளகாய் பொடியைதூவினர். அவர் நிலைதடுமாறினார். அவர் கையில் இருந்த நகை பையை மர்ம வாலிபர் ஒருவன் பறிக்க முயன்றான். அவர் திருடன் திருடன் என்று கத்தினார். உடனே மர்ம வாலிபர் அவரை கத்தினால் குத்திவிடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டினான். 

Monday, September 3, 2012

பி.முட்லூர் சம்மந்தம் கிராமம்;- காதலி வீட்டு முன்பு காதலர் அடித்துக் கொலை

பரங்கிப்பேட்டை அருகே காதலி வீட்டு முன்பு காதலர் அடித்துக் கொலை
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூர் சம்மந்தம் கிராமம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள சுந்தர் என்பவரின் மகள் சுகந்தாவை (20) காதலித்து வந்தார்.   

இவர்களின் காதல் விவகாரம் அறிந்த சுகந்தாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஜெயச்சந்திரன், சுகந்தா வீடு இருக்கும் தெரு வழியாக நடந்துசென்றார். இதை பார்த்த சுகந்தாவின் தந்தை சுந்தர், தாய்ரஞ்சிதம், பெரியப்பா சின்னதம்பி ஆகிய 3 பேரும் ஆத்திரமடைந்தனர். ஜெயச்சந் திரனை சுற்றி வளைத்து இரும்பு குழாய், உருட்டு கட்டைகளை எடுத்துதாக்கினர். 

இந்த தாக்குதலில் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சுகந்தாவின் பெற்றோர் சுந்தர் ரஞ்சிதம் ஆகியோரை கைது செய்தனர். தப்பி சென்ற சின்னதம்பியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.