
சிதம்பரம் மேம்பாலத்தில் கீழே நேற்று இரவு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பச்சை கலரில் டீ சர்ட்டும், வெள்ளை கலரில் கட்டம்போட்ட சட்டை மற்றும் கட்டம்போட்ட கைலி அணிந்திருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து புரூனியோ மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது.
மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து ஓடி அரசு பெண்கள் பள்ளி, ரெயில்வே தண்டவாளம், அம்மா பேட்டை பச்சையப்பன் பள்ளி, பையாங் குப்பம் வழியாக சென்றது. அங்கு பழங் களை பழுக்க வைக்க புகை மூட்டம் போட்டதால் மோப்ப நாய் அதன் பிறகு செல்லாமல் திரும்பி விட்டது.
யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதைத்தொடர்ந்து தடய வியல் நிபுனர் சிவசெந்தில் சம்பவ இடத்தில் தடயங்களை பதிவு செய்தார். கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார், எந்த ஊர், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்பதும் தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment