click me

Saturday, March 30, 2013

சென்னையில் ஒரு நாள் படத்திற்கு வரி விலக்கு தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்.

சரத்குமார் அவரது மனைவி ராதிகா தயாரித்து, அவர் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள் படத்திற்கு வரி விலக்கு தர அதிமுக அரசு மறுத்து விட்டதாம்.
சரத்குமார், ராதிகா, சேரன், பிரசன்னா, மல்லிகா என பலரும் நடித்துள்ள படம் சென்னையில் ஒரு நாள். உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுப் படம் இது. நிஜத்தில் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.
இப்படத்திற்கு வரி விலக்கு கோரியிருந்தனர். அழகான படத் தலைப்பு, அருமையான கதை என சகலமும் சிறப்பாக இருந்தபோதும் கூட வரி விலக்கு இல்லை என்று கூறி விட்டார்களாம்.
இத்தனைக்கும் ஆட்சி அதிமுகதான், முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர்தான் சரத்குமார், அதிமுகவின் இரட்டை இலையில் நின்றுதான் அவர் எம்.எல்.ஏவே ஆனார். ஆனாலும் படத்துக்கு வரிவிலக்கு இல்லை என்று கூறியிருப்பதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஆனால் இந்த மறுப்புக்குக் காரணம் சன் டிவிதான். அதாவது சன் டிவியின் நல்லாசியுடன் என்று இப்படத்திற்கு விளம்பரம் செய்து வருவதுதான் மேலிடக் கண்களை உறுத்தி, வரி விலக்கு வேண்டாம் என்று கூறும் அளவுக்குப் போய் விட்டதாக சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment