click me

Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Sunday, January 13, 2013

ஹிஜாப் தனித்தன்மை


http://www.marhum-muslim.com/இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படும் காலக்கட்டத்தில் அதே ஆடையை அணிந்த பெண்மணி புரட்சியின் சின்னமாக புகழாரம் சூட்டப்பட்டு பிரபல டைம் மாத இதழின் "person of the year" - "பர்ஸன் ஆஃப் த இயரில்"ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். 
உலகில் மிகப்பெரிய கெளரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசை வாங்க ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றுகிறார். தவக்குல் கர்மான், யுவான் ரிட்லி, இன்க்ரிட் மாட்ஸன், நஜ்லா அலி மஹ்மூத், ஃபத்திமா நபீல், அஸ்மா மஃபூஸ், கமலா சுரய்யா என தொடர்கிறது ஹிஜாப் அணிந்த புரட்சி பெண்மணிகளின் எண்ணிக்கை.
மர்வா அல் ஸெர்பினி – ஹிஜாபிற்காக நவீன சுமைய்யாவாக மாறி தனது உயிரை தியாகம் செய்தவர். 2009- ஆண்டு இஸ்லாமிய ஃபோபியா வளர்த்துவிட்ட கொடியவன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்படடார். பிரான்சு உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் முகத்தை மறைக்கும் வகையிலான நிகாபிற்கு தடைவிதித்துள்ளன.

Friday, November 16, 2012

ஆண் பாவம்.


"ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு”
 ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” 
"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு" [எதுக்கு?? ஒரு அடிமை சிக்கிட்டான்ன்னா]
”அடடே ஆண்குழந்தையா போயிட்டுபோகுது ஆத்தா 2 பொட்டப்புள்ள இருக்குன்னு நெனச்சேன் இதாவது ஆணா பொறந்துச்சே"

நீங்க ஹைடெக் சிட்டில இருக்குறவரா இருந்தா இந்த வாசகம்லாம் உங்கள் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.... ஆனால் இன்றும் அதிகப்படியாக ஒலிக்கும் வசனங்கள் தான் இவையெல்ல்லாம்... ஒரு குழந்தை பிறந்தா அது பெண்ணாக இருக்க கூடாது என்பது இவர்களின் முதன்மை எண்ணம்... பொட்டப்புள்ளையா பொறந்தா எம்பூட்டு நல்லதுன்னு இவுகளுக்கென்ன தெரியும். அண்ணாவோடது தம்பியோடது அப்பாவோடது என எல்லா சொத்துக்களிலும் பங்கு வந்துருமுல்ல? பல அம்மாக்கள் சுரண்டியாவது கொடுத்திடமாட்டாங்க :-)
 

எங்க,எப்ப  புள்ள பொறந்தாலும் முதல் கேள்வி ஆணா? ஏன் எல்லா எடத்திலேயும் ஆணா? ஆணா?ன்னு கேட்கிறார்கள்????? அதன் ரகசியம் அறிந்தால் கண்ணா ஆணா பொறக்க ஆசையா இல்லையாங்குறது தெரியும்...எதுவா பிறக்கனும் என்பது நம்மிடத்தில்லை நல்லவேளை..

Wednesday, October 24, 2012

இதோ நான் வந்து விட்டேன் அல்லாஹ்....



லப்பைக்....அல்லாஹும்ம லப்பைக்...
லப்பைக்....அல்லாஹும்ம லப்பைக்...

இதோ நான் வந்து விட்டேன் அல்லாஹ்.... இதோ நான்.... ஹஜ்ஜை நிறைவேற்ற செல்லும் ஒவ்வொரு யாத்ரீகரின் இதயமும் இறையச்சத்தில் சங்கமித்து, இதயம் நிறைய வெளிப்படுத்தும் ஒரே உணர்வு.... ஒரே கேவல்..... யா அல்லாஹ்...இதோ நான் வந்து விட்டேன்.... உனக்காக..... உன் கருணைக்காக, உன் அருளுக்காக... உன் தயவுக்காக... நான் வந்து விட்டேன் யா அல்லாஹ் நான் வந்து விட்டேன்...


மீண்டும் ஒரு ஹஜ்...
மீண்டும் ஓர் உம்ராஹ்...
மீண்டும் ஓர் பயணம...
மெய் உலகிலிருந்து கிட்டத்தட்ட இன்னோர் மெய் நிகர் உலகிற்கு..!!

Wednesday, September 5, 2012

பெண்களுக்கு சமமான சொத்து நியாயமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பொதுவாக எல்லா இடங்களிலும் சொல்லப் படும் ஒரு குற்றச்சாட்டு, இஸ்லாத்தில் பெண்கள் எல்லா விசயத்திலும் பார பட்சமாக நடத்த படுகிறார்கள் என்றும்..! அதிலும் முக்கியமாக சொத்து விசயத்தில் மிக அதிகமாகவே அவர்களுக்கு பாரபட்சம் காட்ட படுகிறது  என்பதாகும்.! மேலும் அநேக  விசயங்களில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான உரிமைகள் தான் வழங்கப் படுகிறது என்றும் பரவலாக  சொல்ல படுகிறது..உண்மையில் அப்படித் தான் நம் மார்க்கத்தில், நமக்கு சொல்ல பட்டிருக்கிறதா, என்பதை பார்ப்போம்..!
 
அதற்கு முன்  பெண்கள்,ஆண்களால் எப்படி நடத்தப் பட்டார்கள் (இப்போதும் கூட) என்பதை நாம் சற்று கவனிக்க வேண்டும்..! அன்றைய கால கட்டத்தில் பெண்கள் வெறும் போக பொருளாகவும், அவர்களுக்கு, என்று தனி மதிப்போ,அந்தஸ்தோ,இல்லாதது மட்டும் அல்லாமல் ,ஆண்களின தேவைகளை பூர்த்தி செய்யும் அடிமைகளாகவும்,அவர்களால் கீழ் நிலை பிறவிகளாகவும்,வியாபார பண்ட மாற்றுப் பொருளாகவும்,நடத்தப் பட்டார்கள் என்றால் அது மிகையில்லை..உதாரணமாக,ஆண்களும்,பெண்களும்,செய்யும் ஒரே தவறுக்கு,ஆணுக்கு ஒரு நீதியும்,பெண்ணுக்கு ஒரு நீதியும் ,வழங்கப் பட்டு வந்தது, அன்றைய காலத்தில்..! இப்படி எல்லா இடங்களிலும் பெண்கள் மோசமாகவும்,கொடுமையாகவும், நடத்தப் பட்டார்கள்..!



அதே போல ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும்  போது அவள் எப்படி ஆணுக்கு சொந்தம் ஆவாளோ, அதே போல அவளின் உடைமைகளும் அவளின் கணவனுக்கு சொந்தம் ஆகி விடும்.திருமணத்திற்கு பின் அவைகளின் மீது அவளுக்கு எந்த உரிமையும் இருக்காது .கணவரின் அதிகாரத்தின் கீழ் தான் அவைகள் இருக்கும் .அவர் இஷ்டப் படி அதை அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.அவரை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது.சொல்ல போனால்,மனைவி என்பவள் ஒரு வகையில் அவளின் கணவனால் விலை கொடுத்து வாங்க பட்ட ஒரு பொருளை போன்றவள்..! அவ்வளவு தான் அன்று  அவளுக்கு மதிப்பு இருந்தது.


பெண்களுக்குக் கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் 
சிறந்த முறையில் உள்ளன.  (2:228)

Tuesday, August 21, 2012

இந்த ரமலான் நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?

அஸ்ஸலாமு அழைக்கும்,

இறைவனின் மாபெரும் உதவியோடு அருட்கொடையாம் ரமலானை கடந்து வந்திருக்கிறோம். சற்று பொருத்து யோசித்து பார்ப்போம்!

இந்த ரமலான் நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?ரமளானில் அதிகமாக குர் ஆன் ஓதினோம்...
அதிகமாக இரவு வணக்கம் புரிந்தோம்...
 
தவறாமல் பஜ்ரு தொழுதோம்.....
தான தர்மங்கள் அதிகம் செய்தோம்....
பாவமன்னிப்பு அதிகம் கேட்டோம்...
நன்மைகள் அதிகம் செய்தோம்....
நோன்பு வைத்து கொண்டு டிவி பார்க்காமல் இருந்தோம்........
பொய் பேசுவதை தவிர்த்து கொண்டோம்..
கோபப்படுவதை, சண்டையிடுவதை தவிர்த்தோ அல்லது குறைத்து கொண்டோம்.
வெட்டி பேச்சு பேசுவதை குறைத்து கொண்டோம்....

அல்லாஹ்விற்கே எல்லா புகழும்..... இத்தகைய நல்ல காரியங்கள் எல்லாம் ரமளானுக்கு மட்டுமே உரித்தானதா??? இத்தகைய நற்காரியங்களை ரமலான் அல்லாத நாட்களிலும் நாம் செய்ய வேண்டும் என்பதற்காக வல்லோன் ஏற்படுத்திய பயிற்சி வகுப்பே நோன்பு!

Friday, August 17, 2012

ரமலானும் அந்த ஏழு நாட்களும்

முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே... எப்படிஅல்லாஹ் கட்டளையிட்ட ஐவேளைத் தொழுகையை தொழுவதிலும்,நோன்பு நோற்பதிலும்ஸகாத்4 தருவதிலும் நமக்கு கூலிகள்உண்டோ... அதே போன்றுதான்அல்லாஹ்வின் கட்டளையை மதித்துஇந்த உதிரப்போக்கு காலங்களில் நாம் தொழுகாமல் இருப்பதற்கும்கூலி கிடைக்கிறதுஆம்அல்லாஹ்வின் கட்டளையைபின்பற்றித்தான் நம் தொழுகையை விட்டிருக்கிறோம் அல்லவா....எனவே அதுவும் ஓர் இபாதத்தே.... எனவே முதலில் அந்தக்கவலையிலிருந்து மீண்டெழுங்கள்.

இரண்டாவதுஇது தீண்டாமை போன்றதொரு கொடிய நோயோ,தீட்டோ அல்லமாறாகதஹாரா என்னும் தூய நிலையை வராத ஒருஇயற்கை/நிலை மட்டுமேஎவ்வாறு ‘ஜனாபா5’ நிலையை அடைந்தால்ஆண்பெண் இருவருக்குமே ‘தூய்மை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதோஅதே போல் இந்த நிலையும் வெளிப்புற அசுத்தமே தவிரஅல்லாஹ்வின் முன் நிற்கக்கூடியவரின் அகத்தூய்மையைகேள்விக்குறியாக்கும் தீட்டல்லஇதனையே அன்னை ஆயிஷா (ரலி)அவர்களின் ஓர் ஹதீஸ்6சில் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, August 8, 2012

நற்குணங்கள் தடுமாறி போனதேன்?


Post image for நற்குணங்கள் தடுமாறி போனதேன்?

இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்களும் “நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)
உண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

Tuesday, August 7, 2012

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

Post image for பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

Monday, August 6, 2012

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு


எழுதியவர்/பதிந்தவர்/உரை 
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.