திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், ஆரணி பாராளுமன்ற தொகுதி தேர்தல் குறித்த பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணைபொதுச் செயலாளர் எதிரொலி மணியன் தலைமை தாங்கினார். |
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 10 இடங்களை பிடிப்போம். 17 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். அப்பா அம்மா பார்த்து நடத்தும் திருமணத்தை ஏற்கவேண்டும். காதலுக்கும், கலப்பு திருமணத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கொள்கை இல்லாத கட்சிகள் ஆனால் பா.ம.க. கொள்கை உள்ள கட்சி என அவர் கூறினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, கணேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். |
Saturday, March 30, 2013
பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம்,
Labels:
தமிழக செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment