click me

Monday, September 3, 2012

பி.முட்லூர் சம்மந்தம் கிராமம்;- காதலி வீட்டு முன்பு காதலர் அடித்துக் கொலை

பரங்கிப்பேட்டை அருகே காதலி வீட்டு முன்பு காதலர் அடித்துக் கொலை
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூர் சம்மந்தம் கிராமம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள சுந்தர் என்பவரின் மகள் சுகந்தாவை (20) காதலித்து வந்தார்.   

இவர்களின் காதல் விவகாரம் அறிந்த சுகந்தாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஜெயச்சந்திரன், சுகந்தா வீடு இருக்கும் தெரு வழியாக நடந்துசென்றார். இதை பார்த்த சுகந்தாவின் தந்தை சுந்தர், தாய்ரஞ்சிதம், பெரியப்பா சின்னதம்பி ஆகிய 3 பேரும் ஆத்திரமடைந்தனர். ஜெயச்சந் திரனை சுற்றி வளைத்து இரும்பு குழாய், உருட்டு கட்டைகளை எடுத்துதாக்கினர். 

இந்த தாக்குதலில் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சுகந்தாவின் பெற்றோர் சுந்தர் ரஞ்சிதம் ஆகியோரை கைது செய்தனர். தப்பி சென்ற சின்னதம்பியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment