கடலூர் நீதிபதிக்கும், காவல்துறை ஆய்வாளருக்கும் மோதல் : ஆய்வாளர் சிறைபிடிப்பு
கடலூர், செப்., 04 : கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், கடலூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி புகழேந்திக்கும், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வளர் கார்த்திகேயனுக்கும் இடையே இன்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை ஆய்வாளரை நீதிமன்றத்தில் சிறைவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக வந்த ஆய்வாளர் கார்த்திகேயனுக்கும், நீதிபதி புகழேந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தள்ளியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கார்த்திகேயனை சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர், குற்றவியல் நடுவர் நீதிபதியிடமும், முதன்மை நீதிபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து ஆய்வாளர் கார்த்திகேயனை நீதிமன்ற ஊழியர்கள் விடுவித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
No comments:
Post a Comment