click me

Tuesday, September 11, 2012

முழுவீச்சில் தயாராகும் இஸ்ரேல் ஈரானை தாக்க

அமெரிக்கா உட்பட மேலை நாடுகளின் எச்சரிக்கையை மீறி ஈரான் அணுகுண்டு தயாரித்து வருகிறது.
இந்த அணுகுண்டு தங்கள் நாட்டுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்று இஸ்ரேல் கருதுகிறது. எனவே அதை அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே ஈராக் இதேபோல அணுஉலையை உருவாக்கிய போது இஸ்ரேல் திடீரென விமான தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலும் அழித்தது. அதைபோன்ற தாக்குதல் ஈரான் மீது நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
சமீப காலமாக இஸ்ரேல் தனது படையை பல்வேறு வகையிலும் தயார்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக விமானப்படை பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஈரான் அணுஉலையை தாக்குவதற்காகதான் இந்த பயிற்சி நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அடிக்கடி ராணுவ ரகசிய கூட்டங்களும் நடந்து வருகின்றன. எந்நேரத்திலும் இஸ்ரேல் விமானங்கள் ஈரானுக்குள் பறந்து அணுஉலை மீது குண்டுவீசி தாக்கலாம் என்ற நிலை உள்ளது.
ஆனால், அதேநேரத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஈரானும் தயாராகி வருகிறது.
அதன் விமான படைகள் முழுவீச்சில் தயார் நிலையில் இருக்கின்றன. விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் தாக்கினால் உடனே இஸ்ரேல் மீது போர் தொடுத்து அந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதற்கும் ஈரான் தயாராகி வருகிறது.

No comments:

Post a Comment