click me

Friday, September 7, 2012

சீனாவின் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது

சீனாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
சீனாவின் யுன்னான், குயிசோவ் மற்றும் சிகுவான் மாகாணங்களில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 20,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5.7 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவில் உணரப்பட்டது.      

யுன்னான் மாகாணத்தில் முதலில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடினர். ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் 5.6 ரிக்டர் அளவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சீன அரசின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  
 

சீனாவின் எல்லையோர மாகாணங்களில் இன்று காலை முதல் மதியம் வரை மொத்தம் நான்கு முறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் சிகுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் பள்ளிக்கூடங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்ததில் 90,000 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment