click me

Tuesday, September 4, 2012

மட்டையை உடைக்க முயன்ற சச்சின் ஹாட்ரிக் போல்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் மிக மோசமான துடுப்பாட்டத்தால் அவதிப்பட்டார். குறிப்பாக இளம் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவர் திணறியதை பார்க்க முடிந்தது.
3 இன்னிங்சிலும் சேர்த்து அவர் 63 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். 3 முறையும் அவர் கிளீன்போல்டாகி வெளியேறினார். வழக்கமாக ஆட்டமிழந்தால் அமைதியாகச் செல்லும் சச்சின் ஹாட்ரிக் போல்டால் மட்டை உடைப்பது போல கோபப்பட்டார்.
அவர் டெஸ்ட் போட்டியில் 51 முறை கிளீன்போல்டாகி உள்ளார். இந்த இடத்தில் டிராவிட் 55 முறை கிளீன்போல்டாகி முதலிடத்தில் உள்ளார்.
அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவின் ஆலன்பார்டர் (53 முறை) 2வது இடத்திலும், சச்சின் 3வது இடத்திலும் உள்ளனர். தொடர்ச்சியாக சச்சின் தடுமாறி வருவது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி உள்ளது.
கவாஸ்கர் உட்பட பல முன்னணி வீரர்கள் 23 வருடங்கள் விளையாடி வரும் சச்சின் ஓய்வு பெறுவது சரியாக இருக்கும் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment