வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூரில் இன்று காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்தும், குளிர்ந்த காற்றும் வீசியது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் கடலூர், தாழங்கூடா, தேவனாம்பட்டினம், கடலூர் துறைமுகம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்தற்கும் மேற்பட்ட படகுகளை மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். கடலூரில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால் தேவனாம்பட்டினம் பகுதியில் 4 அடி உயரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடற்கரையை யொட்டி நடப்பட்டிருந்த மரங்கள் சாய்ந்தன. பெரியகுப்பம் பகுதியிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் வீடு இடிந்து விழுந்தது. தாழங்கூடா பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பினால் 8 தென்னை மரங்கள் சாய்ந்தன. அந்த பகுதியில் சாலைகள் அதிக தூரத்துக்கு வெளியேஅவைகள் வருவதால் படகுகளை மீனவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

No comments:
Post a Comment