
ஜனாதிபதி மாளிகையின் கதவுகளை திறந்துக் கொண்டு, உள்ளே நுழைய முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைந்தோடச் செய்தனர். அதிரடிப்படையினர் வாகனங்களின் மூலம் தண்ணீரை பாய்ச்சியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சிதறி ஓட வைத்தனர்.
இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் 6 பஸ்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 30 தற்காலிக தடுப்பு வேலிகள் ஆகியவை சேதமடைந்தன.
புதுடெல்லி மாநகர கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் டியோ உள்பட 38 போலீசாரும் கல்வீச்சு சம்பத்தில் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment