தேவையானப் பொருட்கள்
- மட்டன் -ஒரு கிலோ
- வெங்காயம்-நான்கு
- தக்காளி-இரண்டு
- இஞ்சி-இரண்டு துண்டு
- பூண்டு-ஆறுபற்கள்
- பச்சைமிளகாய்-நான்கு
- மிளகு-ஒரு தேக்கரண்டி
- சீரகம்-அரைதேக்கரண்டி
- மிளகாய்த்தூள்-இரண்டு தேக்கரண்டி
- தனியாத்தூள்-இரண்டு தேக்கரண்டி
- மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டி
- தயிர்-அரைக்கோப்பை
- பட்டை-இரண்டு துண்டு
- இலவங்கம்-நான்கு
- ஏலக்காய்-நான்கு
- கறிவேப்பிலை-இரண்டு கொத்து
- உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
- எண்ணெய்-அரைக்கோப்பை
செய்முறை
- மட்டனை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொண்டு அரைதேக்கரண்டி உப்புத்தூள்,மஞ்சத்தூள்,நசுக்கிய மிளகு சீரகத்தைப்போட்டு ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.
- வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும்.
- வாயகன்ற சட்டியில் எண்ணெயை காயவைத்து முதலில் வாசனை பொருட்களை போட்டு வறுக்கவும்.பிறகு வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்.பிறகு இஞ்சி பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.
- பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.தொடர்ந்து பச்சை மிளகாய் கறிவேப்பிலை தக்காளியை போட்டு நன்கு வதக்கி கொண்டு தயிரை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
- அரைகோப்பை தண்ணிரை ஊற்றி மசாலாவை நன்கு வேகவைக்கவும்.மசாலா எண்ணெய் கக்கும் வரை வேகவைத்து வெந்த கறியை கொட்டி நன்கு கிளறி விடவும்,அடுப்பின் அனலை குறைத்து வைத்து பதினைந்து நிமிடம் அடுப்பில் வைத்துருந்து இறக்கி விடவும்.
- ஒரு கொத்து கறிவேப்பிலையை மேலாக போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
சப்பாத்தி, சாதம், ரொட்டி போன்றவற்றுக்கு மிக அருமையான ஓரு சைடு டிஷ்.
No comments:
Post a Comment