
முன்னதாக இன்று காலை 9 மணியளவில், பரங்கிப்பேட்டை நகர த.மு.மு.க. கிளை சார்பில் 10 இரண்டு சக்கர வாகனங்கள உட்பட 23 வாகனங்களில் நகர தலைவர் ஹசன் அலி தலைமையில் அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர்.
தமுமுக ஊழியர் கொள்ளுமேடு ரிஃபாயி இறைமறை வசனங்களை ஓதினார். தமுமுக மாவட்ட செயலாளர் என் அமானுல்லா வரவேற்புரையாற்றினார். தமுமுக மாவட்ட பொருளாலர் ஏ.எம்.அய்யுப் மமக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் உள்ளிட்ட மாவட்ட தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமுமுக தலைமைக்கழக பேச்சாளர் கோவை ஜைனுல் ஆபிதீன்,மாவட்டத் தலைவர் ஆகியோர் கண்டண உரை நிகழ்த்தினர்.மமக புவனகிரி நகர செயலாளா பி.முஹம்மது அலி நன்றியுரையாற்றினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.



நன்றி :mypno
No comments:
Post a Comment