click me

Wednesday, December 19, 2012

'சன் ரைசர்ஸ்'டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் புதிய பெயர்

undefinedஇந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) டி20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ள ஹைதராபாத் அணிக்கு 'சன் ரைசர்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் ஐ.பி.எல் சீசன் தொடங்கிய போது டெக்கான் க்ரானிக்கில் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஹைதராபாத் அணிக்கான உரிமத்தை பெற்றிருந்தது.
‘டெக்கான் சார்ஜர்ஸ்' என்ற பெயரில் அது ஒரு அணியை உருவாக்கி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றது. இரண்டாவது சீசனில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடன்களால் டெக்கான் க்ரானிக்கில் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது.

இதனையடுத்து ஹைதராபாத் அணிக்கான உரிமம் கடந்த ஒக்டோபர் மாதம் ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.85 கோடிக்கு சன் குழுமம் ஏலம் கேட்டது.
ஏலத்தில் பங்கேற்ற இதர நிறுவனங்கள் கேட்டதை விட அது அதிகமாக இருந்ததால் சன் குழுமம் ஹைதராபாத் அணிக்கான உரிமத்தை வென்றதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
ஹைதராபாத் அணியின் புதிய பெயர் சூட்டுவதற்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் போட்டி ஒன்றை சன் குழுமம் அறிவித்தது. இதனையடுத்து தற்போது 'சன் ரைசர்ஸ்' என்று அந்த அணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment