
உடல்நலக் குறைவால் குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குஜ்ரால் நேற்று மாலை உயிரிழந்தார். டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் அவரது உடல் யமுனை நதிக் கரைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குஜ்ராலின் மகனும் அகாலி தள எம்.பியுமான நரேஷ் குஜ்ரா உட்பட இரு மகன்களும் பேரனும் இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
குஜ்ரால் உடல் தகனம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment