
இந்த சம்பவம் குறித்து டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் கூறுகையில் : இது வெட்கித் தலைகுனிய வைக்கும் சம்பவம். ஒரு முதலமைச்சர் என்ற முறையில் மட்டுமின்றி, இந்த மாநகரின் குடிமக்களில் ஒருத்தி என்ற வகையிலும் இது அவமானப்பட வேண்டி நிகழ்வு. என் இதயம் முழுக்க அவமானத்தாலும் துயரத்தாலும் கனத்துள்ளது. இது வார்த்தைகளால் பேசும் தருணமல்ல. ஆழ்ந்த இரங்கலை நமக்குள் பகிர்ந்து கொள்ளவேண்டிய தருணம். அந்த இளம் பெண்ணின் ஆத்மா அமைதியடைய வேண்டும். இந்த பயங்கரமான துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் தைரியத்தை அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு கடவுள் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது ஒரு மிகத் துக்ககரமான சம்பவம். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரமான முடிவு வேதனையைத் தருகிறது. இதற்குக் காரணமான குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மறைந்த மாணவிக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவி பலியான சம்பவம் மிகவும் துயரகரமானது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மாணவியின் குடும்பத்தின் பக்கம் அரசு துணை இருக்கிறது என உறுதியளித்தார்.
மாணவிக்காக குரல் கொடுத்த போராட்டக்காரர்களுக்கு நன்றி தெரிவித்த சோனியா போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment