click me

Wednesday, December 26, 2012

பரங்கிப்பேட்டையில் கரூர் வைஸ்யா வங்கி (ATM) இயந்திரம்


தனியார் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனதுதானியங்கி காசாளர் இயந்திரம் (ATM) ஒன்றை  பரங்கிப்பேட்டை நகரில் அமைத்துள்ளது. இதற்கான திறப்பு விழா பரங்கிப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் இன்று காலை நடைபெற்றது. தானியங்கி காசாளர் இயந்திரத்தை (ATM)  R.தவ்ஹீத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன் உறுப்பினர்கள் அருள்ஹபீப் ரஹ்மான் உள்ளிட்டோர்  கலந்துக் கொண்டனர்.
 பரங்கிப்பேட்டை நகரில் இதுவரை கிளை அமைக்காத கரூர் வைஸ்யா வங்கி தனது காசாளர் இயந்திரத்தை (ATM)   அமைத்திருப்பது பாராட்டுக்குரியது,

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களோடு செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான  இந்தியன்  வங்கி இது நாள் வரை தானியங்கி காசாளர் இயந்திரம் (ATM) அமைக்காமல் இட வசதி இல்லை என்பதையே காரணமாக கூறி வருவது,வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தி இருக்கிறது.
படங்கள்: D.முத்துராஜா, MGF 

No comments:

Post a Comment