click me

Friday, December 21, 2012

மோடி ஒரு மாயை:- முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

தேர்தலின் போது கருத்து தெரிவிப்பது நல்லதல்ல என்பதால் இப்போது கூறுகிறேன், ''குஜராத் ஒளிர்கிறது என்கிற பிம்பத்தை வெற்றிகரமாக உருவாக்கி உலா வருகிறார் நரே‌ந்‌திர மோடி என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்

குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ள நிலையில்,இந்திய ஊடக குழுமத் தலைவரும்,முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ, "மோடி பற்றி கருத்தளிக்குமாறு நான் ரொம்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டாலும்என் கருத்து குஜராத் தேர்தலில் எந்தவிதத்திலும் பிரதிப‌‌லித்துவிடக்கூடாதது என்பதால் தவிர்த்து வந்தேன்ஆனால் குஜராத் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்நிலையில் இப்போது என் கருத்தை சொல்லலாம் என்று கருதுகிறேன்.


தன் தலைமையின் கீழ் குஜராத் ஒளிர்கிறது என்கிற பிம்பத்தை வெற்றிகரமாக உருவாக்கி உலா விட்டிருக்கிறார் மோடிஉண்மையில், 2002ஆம் ஆண்டூ சிறுபான்மை முஸ்லிம்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதை குறிப்பிடாவிட்டாலும்வேறு சிலவற்றைக் குறிப்பிட்டாவேண்டும்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடூ நாட்டின் தேசிசராசரியைக் காட்டிலும் குஜராத்தில் மிகவும் அதிக அளவில் இருக்கிறது.அங்கே 48 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் அவதியுறுகின்றனர்

இது குறித்து மோடி கட்டும் கதையில்குஜராத் பெண்கள் குண்டாகிவிடும் பயத்தினால் பால் அருந்துவதில்லைஒழுங்காக சாப்பிடுவதில்லைமக்களில் பெரும்பாலோனோர் சைவ உண்ணிகள் என்றெல்லாம் அபத்தக் காரணங்களைத் தான் அடுக்கினார் என்று கட்ஜூ அவரை கடுமையாக சாடியுள்ளார்

குஜராத்தின் கிராமப்புறத்தில் வறுமை 51 சதவீதம் உள்ளதுஅதில் பழங்குடியினர் 57 சத‌வீத‌ம்தாழ்த்தப்பட்டவர்கள் 49 சத‌வீத‌ம் , மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் 42 சத‌வீத‌ம் பே‌ர் வறுமையில் வாடுகிறார்கள்

நிலமும்மின்சாரமும்சாலைவசதிகளும் பெரிய தொழிலகங்களுக்கலும் மோடி வாரி வழங்குவது உண்மைதான்ஆனால்மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருக்கிறது என்பதையல்லவா நாம் கவனிக்கவேண்டும் ? " என்று கேள்வி  எழுப்பியுள்ள கட்ஜூ "குஜராத் மக்கள் என்றேனும் ஒருநாள் விழித்துக்கொள்வார்கள் என்றறு நம்புகிறேன்என்றும் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment