
ஹைதராபாத்தைச் சேர்ந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐ.பி.எல் அணியை வாங்கியுள்ள சன் டிவி குழுமம், அதற்கு சன் ரைசர்ஸ் என்று பெயரிட்டுள்ளது.
இதன் பயிற்சியாளராக டாம் மூடியும், ஆலோசகர்களாக ஸ்ரீகாந்த், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அணியின் அணித்தலைவரையும் சன் குழுமம் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவராக குமாரா சங்கக்காரா அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணியின் புதிய லோகோ அறிமுக விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அதன் பின்னர் அணித்தலைவராக சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ள செய்தியை சன்ரைசர்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
மேலும் ஹைதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களான டேல் ஸ்டெயின், டுமினி, ஜூவான் தெரான், கேமரூன் ஒயிட், கிறிஸ் லின் ஆகியோர் தொடர்ந்து விளையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஹைதராபாத் அணி டெக்கான் சார்ஜர்ஸாக இருந்தபோதே அதன் அணித்தலைவராக சங்கக்காரா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment