
கனடாவை தாக்கிய பனிப்புயலால், தரையில் 20 செ.மீ உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது.
ஒண்டோரியாவின் கிழக்கிலும், கியூபெக்கின் மேற்கிலும் 26,000 பேர் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.
இதனால் ஹைட்ரோ கியூபெக், ஹைட்ரோ ஒன் மற்றும் ஹைட்ரோ ஒட்டாவா மின்சார நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மின்வெட்டினால் பல சிரமங்களுக்கு உள்ளாயினர்.
ஹைட்ரோ ஒன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் எட்டாயிரம் பேருக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இவர்கள் ஒட்டாவாவின் கிழக்கிலும், மேற்கிலும் குறிப்பாக எம்ப்ரன் அருகே வசிப்பவர்கள் ஆவர்.
ஹைட்ரோ ஒட்டாவா நிறுவனத்திலிருந்து மின்சாரம் பெற்றவர்களும் பனிப்பொழிவு அதிகமானதால் மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
மேலும் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஒட்டாவா விமானநிலையத்திற்கு வந்த 20 விமானங்களும், அங்கிருந்து புறப்பட்ட 20 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டது.

உக்ரைன், போலந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மிக கடுமையான உறைபனிக்கு 200 பேர் வரை பலியாகி உள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உறைபனிக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 56 பேர் பலியாகி விட்டனர், 371 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ரஷ்யாவின் ஐரோப்பிய பகுதிகளில் ஒன்றான உக்ரைனில் பெய்துவரும் உறைபனிக்கு 83 பேர் பலியாகியுள்ளனர்.
அவர்களில் 57 பேரின் பிரேதங்கள் சாலையோரம் கிடந்தன. இவர்கள் அனைவரும் வீடுகளின்றி சாலையோரம் வசித்து வந்த ஏழை மக்கள் என கூறப்படுகின்றது.
இதே போன்று கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்தில் - 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உறைபனி பெய்கின்றது.
இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 49 பேர் குளிர் தாங்காமல் பலியாகி உள்ளனர். இவர்களிலும் பெரும்பாலானவர்கள் வசிக்க வீடில்லாத ஏழைகள் என கூறப்படுகின்றது.








No comments:
Post a Comment