click me

Sunday, December 23, 2012

ஈரான் தலைவர் பெயரில் பேஸ்புக் கணக்கு: மர்ம நபருக்கு வலைவீச்சு

undefinedஈரானின் தலைவர் அயதுல்லா அலி ஹாமினியின் பெயரில் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இணைய தளங்களை உபயோகிப்பது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் பல சமூக வலைதளங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் தலைவர் ஹாமினியின் பெயரில் கணக்கொன்றை யார் தொடங்கியிருப்பார் என்ற மர்மம் எழுந்துள்ளது.
இதில் அயதுல்லா ஹாமினியின் படங்கள், அவரைப்பற்றிய தகவல்கள், பேச்சுகள் என பகிரப்பட்டுள்ளது.

ஈரானுக்கு வெளியில் அவரது கருத்துக்களை கொண்டுசெல்வதற்கே இக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளதென ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
மேலும் ஹாமினியின் ஆதரவாளர்களில் ஒருவர் தொடங்கியிருக்கலாம் அல்லது ஹாமினியின் அலுவலகமே இந்த வேலையை செய்திருக்கலாம் எனவும் சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
undefined

No comments:

Post a Comment