click me

Wednesday, December 19, 2012

நிலவுடன் மோதும் நாசா

காலாவதியான 2 விண்வெளி ஓடங்கள் நிலவில் மோதிய இடத்துக்கு, விண்வெளி வீராங்கனை சேல்லி ரைட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இதற்காக சிறிய அளவிலான விண்வெளி ஓடங்கள் அனுப்பப்பட்டு, ஆய்வு செய்து வருகின்றன.
இதுவரையிலும் விண்வெளி ஓடங்கள் சுமார் 1,14,000 புகைப்படங்களை எடுத்து அனுப்பி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த எப், பிளோ என்ற விண்வெளி ஓடங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவற்றை நிலவின் மீது மோதவிட்டு அழித்துவிட நாசா முடிவு செய்தது.

இதனையடுத்து இந்த விண்வெளி ஓடங்களின் இயக்கம் கடந்த 9ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து விண்வெளி ஓடங்களை நேற்று மாலை நிலவின் மேற்பரப்பில் உள்ள மலையின் மீது மோதச் செய்து, அமெரிக்க விஞ்ஞானிகள் தகர்த்தனர்.
30 வினாடி இடைவெளியில் எப்-பும், பிளோ-வும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி வெடித்துச் சிதறின.
இதற்கிடையே இந்த விண்வெளி ஓடங்கள் மோதி தகர்ந்த இடத்திற்கு, அமெரிக்காவின் முதல் விண்வெளி பெண் வீராங்கனையான சேல்லி ரைட்-டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மரணமடைந்த சேல்லி ரைட் நினைவாக, இந்த பெயரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையங்கள் அங்கீகரிக்க வேண்டும் என நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.
undefined
undefined
undefined

No comments:

Post a Comment