click me

Saturday, December 22, 2012

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி சென்னை வந்தார்

இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, 2 நாள் பயணமாக நேற்று பகல் 1.20 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். துணை ஜனாதிபதிக்கு சென்னை விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை, தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, முப்படை உயர் அதிகாரிகள், மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. சார்பில் ஜின்னா எம்.பி., காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி ஆகியோர் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை வரவேற்றனர்.


இதையடுத்து துணை ஜனாதிபதி காரில் ஏறி கிண்டி ராஜ்பவன் சென்றார். மாலையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துகொண்டார். இன்று (சனிக்கிழமை) காலை 10.40 மணிக்கு அவர், சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

No comments:

Post a Comment